ஜிஹாதிகளை எதிர்த்து போரிட்ட எகிப்திய தளபதி சுட்டுக் கொலை

சினாய் தீபகற்பத்தில் பணிபுரிந்த எகிப்திய தனபதி ஒருவர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள அவருடைய வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மூத்த அதிகாரிகள் இவ்வாறு கொல்லப்படுவது அரிது

இந்த தீபகற்பத்தில், இஸ்லாமிய அரசு குழுவுக்கு விசுவாசமானவர்கள் என்று கூறும் ஜிஹாதிகளோடு எகிப்து போரிட்ட போது, ஓர் ஆயுதப் பிரிவை வழிநடத்தியவர் இந்த பிரிகேடியர் அடெல் ரகாய் ஆவார்.

அந்த பிராந்தியத்திலுள்ள நூற்றுக்கணக்கான படையினரும், காவல்துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இஸ்லாமியவாதிகள் கெய்ரோவிலும், அதற்கு அருகிலும் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.

ஆனால், மூத்த அதிகாரிகளை கொலை செய்வது மிகவும் அரிதாக இருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்