கேமரூனில் ரயில் தடம் புரண்டு 70-க்கு மேலானோர் பலி

வெள்ளிக்கிழமையன்று அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டதில் இதுவரை 70-க்கு மேலானோர்பலியாகியுள்ளதாகவும், சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் கேமரூன் அரசு தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டோரை மீட்கும் முயற்சிகளை கனமழை தடுத்து வருகிறது

இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டோரை மீட்கும் முயற்சிகளுக்கு கனமழை இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

யாவ்யுன்டே மற்றும் தௌயலாவை இணைக்கின்ற பிரதான சாலையின் ஒரு பகுதி உடைந்துள்ளதால், கேமரூனின் இரு நகரங்களுக்கு இடையில் ஓடுகின்ற இந்த ரயிலில் வழக்கத்திற்கு மாறாக பெருங்கூட்டமாக மக்கள் பயணித்துள்ளனர்.

மேலதிக பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. ஒரே நாளில் நடைபெற்றுள்ள இரண்டு சம்பவங்களால் இரண்டு நகரங்களுக்கு இடையிலான முக்கிய போக்குவரத்து பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்