இராக் அரசு படையினரின் முழு கட்டுப்பாட்டில் வந்தது கிர்குக் நகரம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இராக் அரசு படையினரின் முழு கட்டுப்பாட்டில் வந்தது கிர்க்கூக் நகரம்

இராக்கில் கடந்த வெள்ளியன்று, ஐ.எஸ் போராளிகளால் ஊடுருவப்பட்ட கிர்குக் நகரத்தை மீண்டும் தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக இராக் பாதுகாப்பு படைகள் கூறியுள்ளன.

ஏற்கெனவே அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவும் சில பகுதிகளில் விலக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த தீவிர மோதலில் 48 தாக்குதல்தாரிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது சண்டையின் போது தங்களை தாங்களே வெடிக்க வைத்து இறந்திருக்கலாம் என்று ஊடகங்களுக்கு உள்ளூர் காவல்துறை தலைவர் கட்டாப் ஒமர் அரீஃப் தெரிவித்துள்ளார்.

கிர்குக்கில் துப்பாக்கிச்சூடு சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை என்று அங்கிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்