மொசூல் நகரில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

ஆறாவது நாளாக, மொசூல் நகரத்தை மீட்க இராக் அரசு படைகள் சண்டையிடும் இடத்திற்கு, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், ஆஷ் கார்ட்டர் வருகை தந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AHMAD AL-RUBAYE/AFP/Getty Images

மொசூல் நகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தாக்குதல் நடவடிக்கை மிகத்தீவிரமாக இருக்கும் காரகோஷ் நகரத்தில் இராக் அரசு தனது தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. ஆனால் தற்போதும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஜிகாதிகளிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

முன்னேறும் அரச படைகள் மீது பல தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இராக் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மொசூல் நகரத்தின் தெற்கு பகுதியில்,மிஷ்ராக்கில் உள்ள ஒரு சல்பர் தொழிற்சாலையை ஐ.எஸ். படையினர் வெடிக்கச் செய்த போது, நச்சுப் புகைகள் வெளிப்படுத்தப்பட்டது. அந்தப் புகை இராக்கின் முக்கிய தளம் ஒன்றின் மீது பரவி வருகிறது.

அந்த நச்சுப் புகை மூட்டத்தில் இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மொசூலுக்கு அருகில் உள்ள ராணுவ தளத்தில், அமெரிக்க படையினர் , நச்சுப் புகையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகமூடியை அணிந்துள்ளனர்.