ஏமனில் போர் நிறுத்தத்தை நீடிக்க ஐ.நா.முயற்சி

ஏமனில் மூன்று நாள் போர் நிறுத்தம், சனிக்கிழமை காலாவதியாகும் நிலையில், அதை நீட்டிக்க ஐக்கிய நாடுகள் சபை முயற்சி செய்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சில முனைகளில் சண்டைகள் நடந்தாலும், போர் நிறுத்த ஒப்பந்தம் பெரிய அளவில் நீடித்துக் கொண்டுதான் உள்ளது என்று ஐ.நாவின் சிறப்பு தூதர் இஸ்மாயில் வில்ட் ஷேய்க் அஹமத் தெரிவித்தார்

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது, பல டன் கணக்கான உணவு மற்றும் மருந்துகள் விநியோகிக்ப்பட்டது என்றும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் அவை அளிக்கப்பட்டன என்றும் ஏமனின், ஐ.நாவின் மனிதநேய உதவிக்கான ஒருங்கிணைப்பாளர் ஜேமி மெக்கோல்ட்ரிக் தெரிவித்தார்.