எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை

  • 22 அக்டோபர் 2016

பல வழக்குகளை எதிர்கொண்டு வந்த எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு முதல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முகமது மோர்சி (கோப்புப்படம்)

மேல்முறையீட்டு நீதிமன்றம், 2013ல் அதிபர் மாளிகைக்கு வெளியே தீவிரமான மோதலில் ஈடுபட்ட காரணத்திற்காக பதவிபறிக்கப்பட்ட இஸ்லாமியவாத தலைவரான மோர்சிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையை அளித்தது

2013ல், நீதித்துறை பரிசீலனைக்கு அப்பாற்பட்டு தனது தீர்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க மோர்சி எடுத்த முடிவுகள் காரணமாக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள், எகிப்து ராணுவம், ஆட்சியைப் பிடிக்க தூண்டியது.

2011ல் மோர்சி சிறையில் இருந்து தப்பித்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, அவரது வழக்கறிஞர்கள், மேல் முறையீடு செய்துள்ளனர்.