கிர்குக் நகரை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது இராக் அரச படை

  • 22 அக்டோபர் 2016

ஐ.எஸ் படையினர் ஊடுருவிய, கிர்குக் நகரம் மீது வெள்ளியன்று தங்களது முழு கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவந்து விட்டதாக இராக் அரச படைதெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆறாவது நாளாக, மொசூல் நகரத்தை மீட்க இராக் அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில், மொசூல் நகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் காரகோஷ் நகரத்தில் தாக்குதல் நடவடிக்கை மிகத்தீவிரமாகி உள்ளது.

காரகோஷ் நகரத்தில் இராக் அரசு தனது தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. ஆனால் தற்போதும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஜிகாதிகளிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

ஐ.எஸ்சுக்குத் தொடர்பான ஒரு வலைத்தளத்தில், ஐ.எஸ்., இராக் அரசு படையின் தாக்குதலை முறியடித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ல், ஐ.எஸ் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முன்பு, காரகோஷ் நகரம், பெரிய அளவில் கிறிஸ்துவ மக்கள் வாழும் நகரமாக இருந்தது.

ஐ.எஸ் கட்டுப்பாடு காரணமாக, பெருமளவிலான மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.