கலே முகாமிலிருந்து வெளியேற குடியேறிகளுக்கு ஃபிரான்ஸ் வலுயுறுத்தல்

கலேயில் உள்ள குடியேறிகளின் முகாம் அழிக்கப்பட உள்ளதால் அங்குள்ள மக்கள் திங்கட்கிழமை முதல் புறப்பட தொடங்க வேண்டும் என்பதை கூறும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை ஃபிரான்ஸ் அதிகாரிகள் விநியோகிக்க உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கலேய் குடியேறிகள் முகாம்

வனப்பகதி போல இருக்கும் அந்த முகாமில் பிரிட்டனிற்கு செல்ல விரும்பும் 10,000 பேர் உள்ளனர்

அந்த முகாமில் அதிகப்படியானோர் வசித்து வருகின்றனர்; மேலும் அது மோசமான நிலையில் உள்ளது.

வெள்ளிக்கிழமையன்று, அங்குள்ள குடியேறிகள் ஃபிரான்ஸின் பிற இடங்களில் இருக்கும் வரவேற்பு மையங்களுக்கு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அங்கு அவர்கள் தஞ்சம் கோர விண்ணப்பிக்கலாம் என்றும் ஃபிரான்ஸின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியேறிகளை வெளியேற்ற, படைகளை பிரயோகிக்க விரும்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் குடியேறிகள் முகாமைவிட்டு போக மறுத்தால் தாங்கள் தலையிட நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்