ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி இந்த ஆண்டு 10 சதவீதம் உயர்வு: ஐ.நா.,

ஆப்கானிஸ்தானில், ஹெராயின் தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான "ஓபியம் பாப்பி" என்னும் செடியின் சாகுபடி, 2016 ஆம் ஆண்டு பத்து சதவீதம் அதிகரித்து, 200,000 ஹெக்டர் நிலப்பரப்பாக உயர்ந்துள்ளது என ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஓப்பியம் பாப்பி செடிகள்

சாதகமான பருவ நிலை சூழலால் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் 40 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மோசமான பாதுகாப்பு சூழல் மற்றும் சர்வதேச நிதி ஆதரவு குறைப்பு ஆகிய சூழலுக்கு மத்தியில் ஓபியம் சாகுபடி இரண்டு புதிய இடங்களுக்கு பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒபியம் பாப்பி செடி ஒழிப்பில் ஏற்பட்ட தடுமாற்றத்தையும் இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது; இந்த வருடம் 350 ஹெக்டர் நிலப்பரப்பில் மட்டுமே ஓபியம் சாகுபடி ஒழிப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.