ஜப்பானின் உடுநோமியா நகரில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களில் ஒருவர் பலி

ஜப்பானிய நகரான உடுநோமியாவில் உள்ள பூங்கா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இருவர் காயம் அடைந்திருப்பதாகவும் அவசர சேவைகள் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜப்பானின் உடுநோமியா நகரில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களில் ஒருவர் பலி

உள்ளூர் நேரப்படி சுமார் 11.30 மணிக்கு வட டோக்கியோவில் உள்ள டொச்சிகி ப்ரீஃபெக்சர் நகரில் இந்த குண்டு வெடிப்புகள் கிட்டத்தட்ட அடுத்தடுத்து ஒரே நேரத்தில் நடந்தன.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே இருந்த ஒரு வாகன நிறுத்துமிடத்தில் இரு கார்கள் அதே நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததாக போலிசார் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

இந்த வெடிப்பு சம்பங்களுக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்