மொசூல் அருகே உள்ள பஷிகா நகரை கைப்பற்றிய குர்தீஷ் போராளிகள்

  • 23 அக்டோபர் 2016
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொசூல் அருகே உள்ள பஷிகா நகரை கைப்பற்றிய குர்தீஷ் போராளிகள்

இராக்கின் இரண்டாம் நகரமான மொசூலை கைப்பற்ற முன்னேறி வரும் குர்தீஷ் பெஷ்மெர்கா படையினர், பஷிகா என்ற நகரத்தை கைப்பற்றிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக கருதப்படும் மொசூல் நகரிலிருந்து வெறும் 12 கி.மீ தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.

பாஷிகா நகரின் அருகே இருந்த 8 கிராமங்களை சுற்றிவளைத்துவிட்டதாகவும், பஷிகா - மொசூல் இடையே உள்ள முக்கிய நெடுஞ்சாலை ஒன்றை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் குர்தீஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, சுதந்திரமாக நகர்ந்து வந்த ஐ.எஸ் குழுவினரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு கூடுதல் போராளிகளின் வருகை தடுக்கப்பட்டுள்ளது.

பஷிகாவின் இளவரசர் உட்பட டஜன் கணக்கான ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக பெஷ்மெர்கா படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னர், மொசூல் போரை திசை திருப்பும் வகையில், தொலைதூர மேற்கு நகரமான ருட்பா மீது ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்