மொசூல் போரில் இராக்கின் நிராகரிப்பையும் மீறி களம் இறங்கிய துருக்கி

மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றும் போரில் துருக்கியின் ஈடுபாட்டை ஈராக் அரசு நிராகரித்துள்ள போதிலும், இதில் தங்களுடைய படைகள் இணைந்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மொசூல் போரில் இராக்கின் நிராகரிப்பையும் மீறி துருக்கி களம் இறங்கியது

துருக்கி வசம் இருந்த கனரக ஆயுதங்களால் பஷிகா முகாம் அருகே ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட உதவியாக இருந்ததாக அந்நாட்டு பிரதமர் பினாலி இல்திரிம் தெரிவித்துள்ளார்.

இங்குதான் போராளி குழுவிற்கு துருக்கி பயிற்சி அளித்து வருகிறது.

மொசூலிருந்து வெறும் 12 கி.மீ தொலைவில் உள்ள பஷிகா நகரை பெஷ்மெர்கா படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மொசூல் போரில் தங்களுடைய ஈடுபாட்டை துருக்கி வலியுறுத்தி இருந்தது.

ஆனால், இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி மறுத்து வந்தார்.

எனினும், இந்த விவாகாரத்தில் ஓர் உடன்பாட்டை எட்ட முடியும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்