போர்நிறுத்தத்திற்கு பிறகு அலெப்போவில் தீவிரமடையும் தாக்குதல்கள்

ரஷ்யா தன்னிச்சையாக அறிவித்த போர்நிறுத்தம் முடிவடைந்த ஒரு நாளைக்கு பிறகு, சிரியாவின் பெரிய நகரத்தை கைப்பற்றுவதற்கான போர் தீவிரமடைந்திருப்பதாக அலெப்போவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட வியாழக்கிழமையும் இந்த புகைப்படத்தை எடுத்து தாக்குதல் நடைபெற்றதாக ஆர்வலர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அலெப்போ நகரின் மேற்கே கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் அதிகாலை வேளையில் ரஷ்யாவால் அல்லது சிரியா அரசு கூட்டணி படைகளால் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அலெப்போவின் வடக்கு பகுதியிலும் விமானத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக அறிக்கைகள் வந்துள்ளன.

இதேவேளையில், ஆகஸ்ட் மாதத்தில் இடப்பட்டிருந்த முற்றுகையை, கிளர்ச்சியாளர்கள் ஓரளவு முறியடித்த அலெப்போவின் தென்மேற்கு பகுதியிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்கள முனையில், தீவிர போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

தங்களுடைய ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பாடாமல் போனதால், போர்நிறுத்தத்தின்போது கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் காயமடைந்தோரை வெளியேற்ற முடியவில்லை என்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்