நாட்டின் பெரிய கால்நடை பண்ணை சீனர் கைகளில் போகாமல் இருக்க ஆஸ்திரேலியர்கள் முயற்சி

சீன முதலீட்டாளர்களிடம் இருந்து நிலத்தை பாதுகாக்கும் வகையில், நாட்டின் மிகப் பெரிய கால்நடை பண்ணையை வாங்குவதற்கான ஒரு போட்டி முயற்சியை ஆஸ்திரேலியாவின் நான்கு பணக்கார நிலப்பிரபுக்கள் தொடங்கியுள்ளனர்.

Image caption தேசிய நலன்களை பாதுகாக்க இரண்டு சீன பேரங்கள் ஏற்கெனவே நிராகரிப்பு

ஆஸ்திரேலிய-சீன கூட்டு நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்த 294 பில்லியன் டாலர் தான், எஸ்.கிட்மேன் மற்றும் நிறுவனம் என்ற கால்நடை பண்ணைக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ஆஸ்திரேலியாவிலே தெரிவிக்கப்பட்ட அதிக பேரத் தொகையாகும்.

தேசிய நலன்களை பாதுகாக்கின்ற நோக்கில், இந்த நிலத்திற்கான இரண்டு சீன பேரங்களை ஆஸ்திரேலியா ஏற்கெனவே நிராகரித்துவிட்டது்

மத்திய ஆஸ்திரேலியாவின் மூன்று பெரிய பிரிவுகளில் பரந்து கிடக்கும் நாட்டின் சுமார் 2.5 சதவீத விவசாய நிலத்தை கிட்மேன் கால்நடை பேரரசு தன்னிடம் வைத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்