அதிபர்கள் இரண்டாவது முறையாக பதவி வகிக்க அனுமதிக்கும் சட்டத்தை முன்மொழிந்த தென் கொரிய அதிபர்

  • 24 அக்டோபர் 2016

தென் கொரியாவில், அதிபர்கள் இரண்டாவது முறையாக ஐந்தாண்டுகள் பதவி வகிக்க அனுமதிக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்தும் யோசனையை தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை முன்மொழிந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை

நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது, தனது அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து விவாதங்களை தொடங்க சிறப்பு குழு ஒன்றை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் அதிபர் பார்க் குன் ஹையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்பாகவே இந்த சட்ட மாற்றம் அமலாக்கப்பட அவர் விரும்புகிறார்.

தற்போது நடைமுறையில் உள்ள ஒரு பதவிக்கால கட்டுப்பாடு காரணமாக தொடச்சியாக கொள்கைகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் இருப்பதாகவும், அரசியலில் மோதல் நிலை இன்னும் அதிகரிக்க உதவியாக இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவரும் முயற்சி பிரிவினையை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இறுதியாக 1987 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டமானது மாற்றப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்