கத்தாரின் முன்னாள் இளவரசர் ஷேக் கலிஃபா பின் ஹமத் 84 வயதில் காலமானார்

கத்தாரின் முன்னாள் இளவரசர் ஷேக் கலிஃபா பின் ஹமத் அல்-தானி தன்னுடைய 84 வயதில் காலமானார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கத்தாரின் முன்னாள் இளவரசர் ஷேக் கலிஃபா பின் ஹமத்

தற்போதைய இளவரசரும் ஷேக் கலிஃபாவின் பேரனுமான, ஷேக் தமின் பின் ஹமாத் அல்-தானி, தாத்தாவின் இறப்பை ஒட்டி வளைகுடா நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சுமார் 2.5 மில்லியன் தொகை கொண்ட வளைகுடா நாடு, பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று ஓர் ஆண்டுக்குப்பிறகு, 1972 ஆம் ஆண்டிலிருந்து 1995 வரை ஷேக் கலிஃபா ஆட்சி செய்து வந்தார்.

சுவிட்ஸர்லாந்திற்கு விடுமுறைக்காக சென்றிருந்தபோது ஷேக் கலிஃபாவை அவருடைய மகன் பதவியிலிருந்து இறக்கினார்.

1991 ஆம் ஆண்டு குவைத்திலிருந்து முன்னாள் இராக் தலைவர் சதாம் ஹுசைனின் படைகளை விரட்ட ஏற்பட்ட போரில் கத்தாரி விமானத் தளங்களை பயன்படுத்த அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் ராணுவ விமானங்களுக்கு ஷேய்க் கலிஃபா அனுமதி வழங்கினார்.

தொடர்புடைய தலைப்புகள்