சீனாவின் யுலின் நகரில் குண்டுவெடிப்பு

  • 24 அக்டோபர் 2016

சீனாவின் வட மேற்கில் அமைந்துள்ள யுலின் நகரத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை ECNS
Image caption அப்பகுதி கட்டடங்களில் அதிக பாதிப்பை புகைப்படங்கள் காட்டுகின்றன

எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என தெளிவாக தெரியவில்லை.

மிக மோசமாக சேதமடைந்த கார்கள், கட்டடங்களோடு, கடும் புகை எழும்புவதையும் தெருக்களில் இடிபாடுகள் சிதறி கிடைப்பதையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

ஒரு மருத்துவமனைக்கு அருகிலுள்ள குடியிருப்பு இந்த குண்டுவெடிப்பால் பிளவு பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் வெடிப்பொருட்களை சேமித்து வைத்திருந்தது, இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் செய்தித்தாள் ஒன்று தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு 100 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்ட தியன்ஜின் மாநகரில் ஏற்பட்ட பெரிய வெடி விபத்திற்கு பிறகு, விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை சேமித்து வைக்கின்ற விதிமுறைகளை சீன ஆட்சியாளர்கள் வலுப்படுத்தி உள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்