மூன்றாண்டுகளில் ஒரு மில்லியனுக்கு மேலான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்திருக்கும் சீனா

  • 24 அக்டோபர் 2016

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கு (பத்து லட்சம்) மேலான அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்துள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஊழல் சந்தேக நபர்கள், பிற குற்றங்களோடு, கையூட்டு மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பதாக சீன அரசு கூறுகிறது

பெய்ஜிங்கில் ரகசியமாக நடைபெறும் கட்சியின் உயர் மட்ட கூட்டத்தில் இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆரம்பித்து வைத்த உயர் அதிகாரிகள் செய்த ஊழலை விசாரிக்கும் நடவடிக்கையின் தாக்கத்தை இது காட்டுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்,

வெளிநாடுகளில் இருக்கும் முன்னாள் ஊழல் அதிகாரிகள் 400 பேருக்கு அதிகமானோர், இந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருப்பதாக சீன கம்யூனிச கட்சியின் மத்திய ஒழுங்குமுறை ஆணையமும் கூறியிருக்கிறது.

நான்கு நாட்கள் நடைபெறும் அனைத்து கட்சி பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்கும் விதிமுறை மாற்றங்கள், அதிபர் ஷி ஜின்பிங்-கிற்கு அதிக அதிகாரத்தை கொடுப்பதாக அமையும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்