மில்லியனுக்கு 400 பகுதிகளுக்கு மேலாக காற்று மாசுபாடு நிலையாக இருக்கும் 2016

  • 24 அக்டோபர் 2016

புவியை வெப்பமடையச் செய்யும் கிரின்ஹவுஸ் வாயு, கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றின் வளிமண்டல நிலைகள் இந்த ஆண்டு முழுவதும் மில்லியனுக்கு 400 பகுதிகளுக்கு மேலாக இருக்கின்ற முதல் ஆண்டாக 2016 அமையும் என்று பருவகால மாற்றத்தை கண்காணிக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை NASA
Image caption பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகின்ற அடுத்த மாதத்திலிருந்து அமலாகும் புதியதொரு ஒப்பந்தம் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது

காலநிலையின் எதார்த்தத்தில் ஒரு புதிய காலக்கட்டத்தில உலகம் நுழைந்திருக்கும் நிலையில், இந்த வாயுக்கள் வெளியேற்ற அளவுகள் உலக அளவில் பல தலைமுறைகளாக கீழிறங்க போவதில்லை என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

வளி மண்டலத்தில் இருக்கின்ற கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, தொழில்புரட்சி உருவான காலகட்டத்துக்கு முன்பு இருந்ததை விட இப்போது 44 சதவீதம் அதிகமாகும்.

படத்தின் காப்புரிமை NOAA
Image caption 2016 ஆம் ஆண்டு மில்லியனுக்கு 400 பகுதிகளுக்கு மேலாக காற்று மாசுபாடு நிலையாக இருக்கிறது

மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உள்பட பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பு விபரங்களையும் உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை வழங்கியுள்ளது.

பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துகின்ற புதியதொரு ஒப்பந்தம் அடுத்த மாதத்திலிருந்து அமலாக இருக்கிறது. ஆனால், அதனுடைய கட்டுப்பாடுகள் உடனடியாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.

தொடர்புடைய தலைப்புகள்