கோபமடைந்த குடியேறிகள் கிரேக்க அலுவலகங்களுக்கு தீ வைப்பு

லெஸ்போஸ் தீவில் உள்ள அகதிகள் மற்றும் குடியேறிகள், அங்குள்ள தாற்காலிக அலுவலகங்களுக்கு தீ வைத்துவிட்டதாக கிரேக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தஞ்சக் கோரிக்கை அடங்கிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தாமதம் ஏற்பட்டதால் 70 ஆர்ப்பாட்டக்கார்கள் கோபமடைந்து இதனை செய்துள்ளனர்

பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 70 ஆர்ப்பாட்டக்கார்கள், தங்களது தஞ்சக் கோரிக்கை அடங்கி விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்து இந்த நடவடிக்கையில் இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அருகிலுள்ள பல்கேரியாவிலும், ஆயிரக்கணக்கான குடியேறிகளால் பிரச்சனை உள்ள நிலையில், ஹர்மன்லி நகர் அருகே உள்ள அகதி முகாமில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களது விருப்பமில்லாமல் அடைத்து வைத்திருப்பதாகவும், அங்குள்ள சூழல் மிக மோசமாக இருப்பதாகவும் கூறி ஆப்கன் மற்றும் சிரியாவைச் சேர்ந்த சுமார் 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்