பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீஸ் பயிற்சி கல்லூரியின் மீது தாக்குதல்: 50 பேர் பலி

பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதி நகரான குவெட்டா நகருக்கு வெளியே அமைந்திருந்த உள்ள ஒரு போலீஸ் பயிற்சி கல்லூரியின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில், அங்கிருந்த ஏறக்குறைய 50 போலீஸ் படை பயிற்சி பெறுபவர்களும், காவலர்களும் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாக்குதல் நடந்த போலீஸ் பயிற்சி கல்லூரி

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption தாக்குதலில் காயமடைந்தோர்

நூற்றுக்கணக்கான பயிற்சியர் தங்கியிருந்த இந்த போலீஸ் பயிற்சி கல்லூரியின் விடுதியின் உள்ளே நுழைந்த தாக்குதல்தாரிகள் அங்கிருந்த பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

இச்செய்தியறிந்த அரசுத் துருப்புக்கள் இங்கு விரைந்து ஒரு துப்பாக்கிதாரியை சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தாங்கள் மேற்கொண்டதாக எந்த குழுவும் இது வரை கூறவில்லை.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த தாக்குதல்தாரிகள் இயக்கப்பட்டு இருக்கலாம் என்று தான் நம்புவுதாக, ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி பிபிசியிடம் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்