ருட்பா நகர் மீதான கட்டுப்பாட்டை மீட்டது இராக் அரசு படை

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் தாக்குதல் நடத்திய, இராக்கின் மேற்கிலுள்ள ருட்பா நகர் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக இராக் பாதுகாப்பு படைப்பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தப்பியோட முயற்சித்த தீவிரவாதிகளின் வாகன அணி மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது

தரையில் போர் நடத்தி வருகின்ற இராக் அரசப் படையினருக்கு ஆதரவாக விமானத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுகின்ற அமெரிக்க தலைமையிலான கூட்டணி படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தப்பியோட முயற்சித்த தீவிரவாதிகளின் வாகன அணி மீது ஒரு விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இராக்கின் வட பகுதியில், இஸ்லாமிய அரசு குழுவினரின் பிடியில் இருக்கும் மொசூல் நகரை சுற்றியிருந்த அரசப் படையினரின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாக, ருட்பா நகர் மீதான இந்த குழுவின் தாக்குதல் தோன்றுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்