பாகிஸ்தான்: போலிஸ் பயிற்சி கல்லூரி தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

60 பேர் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் மேற்கு நகரான குவெட்டாவுக்கு அருகே அமைந்துள்ள காவல்துறை பயிற்சி கல்லூரியின் மீதான தாக்குதலை தாங்களே நடத்தியதாக இஸ்லாமிய அரசு குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெற்றுள்ள தீவிரவாதிகளின் மூன்றாவது மிக மோசமான தாக்குதல்

தாலிபனின் கிளை குழு ஒன்றும் இதற்கு பொறுப்பேற்றிருக்கிறது.

ஆனால், கடந்த ஆண்டு தலைவர் கொல்லப்பட்டதால், ஷியா முஸ்லிகளுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாத குழுவான லஷ்கர் இ-ஜங்வி இதனை நடத்தியிருக்கும் என ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படுக்கைகளுக்கு கீழே மறைந்திருந்த இளைஞர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பாகிஸ்தான் போலிஸ் பயிற்சி கல்லூரி தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

சுவர்கள் கறுப்பாகவும், படுக்கைகள் கருகிய நிலையில் கிடப்பதையும் இந்த தாக்குதலுக்கு பின்னர் வெளியாகிய காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெற்றுள்ள தீவிரவாதிகளின் மூன்றாவது மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதலாகவும் இது உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்