கலே ஜங்கிள் முகாமை இடிக்கும் பணி தொடங்கியது

  • 25 அக்டோபர் 2016

ஃபிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் கலே துறைமுகத்தில் உள்ள, "ஜங்கிள்" என்று அழைக்கப்படும் பெரிய குடியேறிகளின் முகாமை ஃபிரான்ஸ் போலிஸார் இன்று இடிக்கத் தொடங்கிவிட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இரண்டாம் நாளாக நடைபெற்று வரும் அப்புறப்படுத்தும் பணியில் குடியேறிகள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

திங்களன்று அந்த முகாமின் கால் பகுதிக்கும் மேலான குடியேறிகளான எட்டாயிரம் பேர், ஃபிரான்ஸின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரட்டனிற்குச் செல்ல விரும்பும் குடியேறிகளின் புகலிடமாக இந்த முகாம் பல வருடங்களாக இருந்து வந்தது, ஆனால் உள்ளூர் மக்கள் மத்தியில் இதுகுறித்து சீற்றம் அதிகரித்தது.

விரைவாக தொடங்கப்படும் முகாமின் இடிபாட்டுப் பணி, உள்ளூர் மக்களுக்கு தங்கள் கோரிக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை காட்டும் அறிகுறி என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்