போப்பின் மூத்த நிதி ஆலோசகர் மீது பாலியல் குற்றச்சாட்டு விசாரணை?

போப்பின் மூத்த நிதி ஆலோசகர்,கர்தினால் ஜார்ஜ் பெல்லிடம் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நடத்த ஆஸ்திரேலிய போலிசார் கடந்த வாரம் ரோம் நகரத்திற்கு வந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

கர்தினால் பெல் ஆஸ்திரேலியாவில் இளம் பாதிரியாக இருந்த போது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக வந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார்.

அவர் எந்தத் தவறும் நடக்கவில்லை என மறுத்துள்ளார்.

அவர் மெல்போனில் பேராயராக பணியாற்றிய போதும், பின்னர் சிட்னியில் பணியாற்றிய போதும், மத குருமார்களின் துஷ்பிரயோகம் குறித்த வழக்குகளைத் தவறுதலாக நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.