குடியேறிகள் வெளியேற்றப்பட்ட பிரான்சின் ' ஜங்கிள்' குடியேறி முகாம், தீயில் சேதம்

வடக்கு பிரான்சில் ' ஜங்கிள்' (Jungle) என்று அறியப்படும், பரந்து கிடக்கும், குடியேறிகள் முகாமில் நேற்றிரவு ஏற்பட்ட தீயில், அதிகாரிகளால், சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்ட, முன்பு பெரிய அளவில் இருந்த கடைகள், உணவகங்கள் ஆகியவை சேதமடைந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

இடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கும், அந்த முகாமை விட்டு வெளியேற விரும்பாத, குடியேறிகள் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டும் கடைசி நடவடிக்கை தான் அந்தத் தீ என்று கருதப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டன் செல்லும் முயற்சியில் அங்குக் கூடியிருந்தனர்.

பிரெஞ்சு அதிகாரிகள் கடந்த திங்கள் முதல், 4,000 குடியேறிகள், பிரான்ஸை சுற்றியுள்ள குடியேற்ற மையங்களுக்குப் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.