மத்திய ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கடத்திய பொது மக்கள் 30 பேர் கொலை

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், முன்னதாக கடத்திய, குறைந்தது 30 பொது மக்களைக் கொன்றுவிட்டதாக, மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பணயக் கைதிகளை விடுதலை செய்யும் போலிசாரின் நடவடிக்கையின் போது, ஒரு ஐ.எஸ். தளபதி கொல்லப்பட்டார் என்றும், இதற்குப் பதிலாக தீவிரவாதிகள் பொது மக்களைக் கொன்றுவிட்டதாகவும், கோர் மாகாண ஆளுநர் பி பிசியிடம் தெரிவித்தார்.

ஐ.எஸ். அமைப்பு, கிழக்கு ஆப்கானிஸ்தானில், ஒரு வலுவான நிலையில் உள்ளது. ஆனால் தற்போது வரை கோர் பகுதியில் தீவிரமாகச் செயல்படவில்லை.

ஆய்வாளர்கள், அந்தக் குழு முன்னாள் தாலிபான் போராளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.