உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற பெண் போலி அடையாள அட்டை தயாரித்த குற்றத்துக்காக கைது

இளம் பெண்ணாக இருந்த போது நேஷனல் ஜியோகிராபிக் மேகசின் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம்பெற்று உலகப் புகழ் பெற்ற ஆப்கான் பெண்ணொருவர் தற்போதுபாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஷார்பாத் குலாவின் புகைப்படத்துடன் தோன்றுவது அவரை 1984-இல் புகைப்படம் எடுத்த ஸ்டீவ் மெக்கர்ரி

கடந்த 1984-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருந்த ஆப்கான் அகதியான ஷார்பாத் குலாவின் புகைப்படம், நேஷனல் ஜியோகிராபிக் மேகசின் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற பின்னர், அப்பத்திரிக்கையின் மிகப் புகழ்பெற்ற அட்டைப் படமாக மாறியது. சிலர் இப்புகைப்படத்தைஉலக பிரசித்தி பெற்ற மோனாலிசாவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஷார்பாத் குலா

தற்போது நாற்பது வயதை தாண்டியுள்ள ஷார்பாத் குலா, ஒரு போலி பாகிஸ்தான் அடையாள அட்டையை பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெஷாவரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்