சிரியாவில் நடந்த வான் வழி தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்டனரா?
வடக்கு சிரியாவில் போராளிகளின் பிடியில் உள்ள ஒரு தீவிரகிராமத்தில் நடந்த பலமான வான் வழி தாக்குதல்களால் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வான் வழிதாக்குதல் நடத்தப்பட்டதில் சேதமடைந்த கட்டடங்களில் ஒரு பள்ளிக்கூடமும் இடம்பெற்றுள்ளது. இதில் இருந்த பல குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து சிரியாவின் அரசுத் தொலைக்காட்சி குறிப்பிடுகையில், தீவிரவாதிகளின் நிலைகள் குறி வைத்து தாக்கப்பட்ட போது அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இட்லிப் மாகாணத்தில் அமைந்துள்ள ஹாஸ் என்ற இந்த கிராமம், சிரியாவின் அரசுக்கு எதிராக போராடும் போராளிகளின் கோட்டையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.