பிரிட்டன் பெருநிறுவன ஆடை தயாரிப்பில் சிரிய அகதிச்சிறார்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டன் பெருநிறுவன ஆடை தயாரிப்பில் சிரிய அகதிச்சிறார்கள்

பிரிட்டன் கடைகளுக்கான ஆடைகளை உருவாக்கும் பணியில் சிரிய நாட்டு அகதிக்குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது.

Marks and Spencer, ASOS போன்ற நிறுவனங்களுக்கான ஆடைகளை தயாரிக்கும் துருக்கி நிறுவனங்களுக்கு பிபிசியின் பனோரமா குழு நேரில் சென்று புலனாய்வு செய்தது.

அப்போது அந்த நிறுவனங்களில் சிரிய நாட்டு அகதிச்சிறார்கள் பணி செய்வதை பிபிசி செய்தியாளர்கள் கண்டறிந்தனர்.

அதேசமயம், சிறார் தொழிலாளர் சுரண்டலை தாம் சகித்துக்கொள்வதில்லை என்று இந்த பிரிட்டிஷ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.