வெனிசுவெலா அதிபருக்கு எதிரான போராட்டத்தில் பலர் காயம்

படத்தின் காப்புரிமை EPA
Image caption பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை அரசு கையாண்ட விதத்துக்கு எதிராக போராட்டம்

வெனிசுவெலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் பலர் காயமடைந்தனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்திய நிலையில், போலீஸ் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர்.

அதிபர் ஜனநாயக நடைமுறைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, அவர் மீது விசாரணையைத் துவக்க, எதிர்க்கட்சி தலைமையிலான தேசிய நாடாளுமன்றம் வாக்களித்த அடுத்த நாள் இந்தப் போராட்டங்கள் வெடித்தன.

படத்தின் காப்புரிமை AP
Image caption பெருமளவில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஆனால், தனது ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக மதுரோ குற்றம் சாட்டுகிறார்.

ஜனநாயக ஒற்றுமைக் கூட்டணி எதிர்க்கட்சி, வெள்ளிக்கிழமையன்று 12 மணி நேர பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.