சாம்ஸங் லாபத்தில் 30 சதம் வீழ்ச்சி: கேலக்ஸி நோட் 7 தாக்கமா?

படத்தின் காப்புரிமை Donald Bowers
Image caption வீழ்ச்சியைத் தடுக்க போராட்டம்

எலக்ட்ரானிஸ் ஜாம்பவான் சாம்ஸங் நிறுவனத்தின் லாபம் 30 சதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் ஃபோன்கள் திடீரென தீப்பிடித்து வெடிப்பதாக பெருமளவில் புகார்கள் வந்ததை அடுத்து, அந்த ஃபோன்களின் உற்பத்தியை சாம்ஸங் நிறுவனம் நிறுத்தியது. அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு லாப வீழ்ச்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாம்ஸங்கின் பிரதான போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம், தங்களது கருவிகளின் விற்பனை மற்றும் லாபம், 2001-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக குறைந்திருப்பதாக இந்த வாரத் துவக்கத்தில் அறிவித்திருந்தது.