மத்திய இத்தாலியில் அடுத்தடுத்து இரு முறை பலமான நிலநடுக்கம்

மத்திய இத்தாலியில், ஆகஸ்ட் மாதம் சுமார் 300 பேரைக் கொன்ற நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில், இரண்டு மணி நேர இடைவெளியில் , இரண்டு பலமான நிலநடுக்க நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

இத்தாலியின் அவசர சேவைப் பணியாளர்கள் இரவு முழுவதும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கில் உள்ள பரூஜா நகரத்தில், ஏற்பட்ட இரண்டு நிலநடுக்க நிகழ்வுகள் 5.4 மற்றும் 6 என்ற அளவில் ஏற்பட்டுள்ளன.

தீவிர காயங்களோடு மக்கள் உள்ளதாக சில செய்திகள் வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், சேதத்தின் அளவை மதிப்பீடு செய்வதற்கான முயற்சிகளுக்கு, மோசமான வானிலை இடையூறாக உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையத்திற்கு அருகில், கிராமங்கள் சேதமடைந்துள்ளன என்றும் கட்டிடங்கள் சரிந்ததாகவும் மற்றும் மின்சரம் இல்லாத நிலை நிலவுவதாக உள்ளூர் மேயர்கள் தெரிவித்தனார்.