பசிபிக் கடலை தனியாகக் கடக்கும் சாதனையில் ஈடுபட்டிருந்த சீன படகோட்டி மாயம்

பசிபிக் கடலை தனியாகக் கடக்கும் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குவோ சுவான் என்ற ஒரு சீன படகோட்டி, காணாமல் போயுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹவாய் கடற்பகுதியில், அவர் இல்லாத நிலையில், அவரது படகு மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படை குவோ சுவானை தேடி வருகிறது.

கடல் வழியாக, தனியாக, உலகைச் சுற்றி பயணம் செய்த முதல் சீன நபரான குவோ சுவான், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அக்டோபர் 18ம் தேதி, 20 நாட்களுக்குள் ஷாங்காயை அடையும் இலக்குடன், கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையன்று அவருடன், அவரது குழுவினர் தொடர்பை இழந்த உடன், ஹவாய் பகுதித் தீவான, ஒவாஹு கடற்பரப்புக்கு சுமார் 1,000 கிமீ தொலைவில், அவர் கடைசியாக காணப்பட்ட பகுதிக்கு, தேடுதல் விமானம் ஒன்று அனுப்பப்பட்டது.