இஸ்லாமியவாதத் தாக்குதல் எதிரொலி : கென்யாவின் வடகிழக்கு மாகாணத்தில் ஊரடங்கு

செவ்வாயன்று இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட, கென்யாவின் வடகிழக்கு மந்தெரா மாகாணத்தின் சில பகுதிகளில் மாலை முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பொது மக்கள், மாலை 6:30மணி முதல் காலை 6:30மணி வரை தங்களது வீடுகளில் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்த ஊரடங்கு உத்தரவு இரண்டு மாதம் அமலில் இருக்கும்.

ஒரு உணவகத்தின் மீது நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் படையினர் 12 பேரைக் கொன்றனர். அந்தத் தாக்குதலில் ,வெளி பிராந்தியத்திற்கு இருந்து வந்த கென்ய மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு உணவக காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அல்-ஷபாப் கென்யாவில் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. .