தெற்கு மடகாஸ்கரில் 1.5 மில்லியன் மக்கள் பசியால் தவிப்பு : ஐ.நா தகவல்

தெற்கு மடகாஸ்கரில், எல் நினோ என்ற வானிலை கால மாற்றத்தால் மோசமடைந்துள்ள, கடுமையான வறட்சி காரணமாக, கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த ஆண்டு ஆண்ரோய் என்ற பகுதியில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 80 % அளவில் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவுகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மரவள்ளிக்கிழங்கு உட்பட, பிற அத்தியாவசியப் பொருட்கள், கையிருப்பில் குறைந்த அளவே உள்ளன.

விதைகளை சாப்பிட்டும், தங்கள் விவசாய கருவிகள் மற்றும் விலங்குகளை விற்றும் அங்குள்ள மக்கள் பசியை சமாளித்து வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்