ஊழலை சமாளிக்கும் நோக்கில் யுக்ரைன் அரசியல் தலைவர்களின் புதிய சொத்து விபரங்கள் வெளியீடு

அரசியல் தலைவர்களின் சொத்துக்களை இணையத்தில் வெளிப்படுத்தும் தகவல் தளம் ஒன்றை யுக்ரையின் வெளியிடத் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அரசியலில் ஊழலை சகிக்க முடியாது என்று பிரதமர் ரோய்ஸ்மன் வலியுத்தி இருக்கிறார்

ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து மூத்த பொது அதிகாரிகளும் தங்களுடைய சொத்துக்களின் அறிவிப்புக்களை வெளியிட வேண்டும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption முன்னாள் அதிபர் விக்டோர் யானுகோவிக் அனுபவிக்கின்ற சொகுசு வாழ்க்கையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

பிரதமர் வேலோடிமியர் ரோய்ஸ்மனும் அவருடைய மனைவியும் 1.8 மில்லியன் டாலரை பணமாகவும், 15 சொத்துக்களையும், விலையுயர்ந்த கைக்கடிகாரங்களையும் கொண்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1.8 மில்லியன் டாலருக்கு அதிகமாக டாலரை பணமாக வைத்திருப்பதாக ஹார்கிவ்-யின் மேயர் ஹெனாடி ஹெய்னஸ் தெரிவித்திருக்கிறார்

அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ தன்னுடைய சொத்துக்கள் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கீவ்-விலுள்ள வீடில்லா மக்கள்: வறுமையின் கோர பிடியில் யுக்ரேனியர் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த திட்டம் ஊழலை கையாள உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால், மாதம் 57 டாலர் குறைந்தபட்ச ஊதியமாக இருக்கின்ற நாட்டில், அதிகபட்ச சொத்துக்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகளை சிறிது காலத்திற்கு இது வெளிகாட்டும் என்று கிவ்விலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்