அலெப்போ: அரசப் படைகளின் முற்றுகையை அகற்ற தாக்குதல் தொடங்கிய கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் கிழக்கு பகுதி நகரான அலெப்போவில் அரசப் படைகளின் முற்றுகையை அகற்றுவதற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தாக்குதலை கிளர்ச்சி படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.
பல முனைகளில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
காலையில் மூன்று பெரிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. நகரின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அரசின் விமான தளத்தை டஜன்கணக்கான ராக்கெட் குண்டுகள் தாக்கியுள்ளன.
15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர்.
அரச படைப்பிரிவுகள் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாகவும், அலெப்போவின் தெற்கு மற்றும் மேற்குப் புறநகர்ப் பகுதிளில் விமானத் தாக்குதல்கள் நடத்தியிருப்பதாவும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து ஒரு தரை தாக்குதலை நடத்தப்போவதாகக் கிளச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் எவ்வாறு அதை செய்யப் போகிறார்கள் என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.