கூட்டு ஒப்பந்தத்தை ஏற்குமா ஹாலந்தின் எதிர்க்கட்சி - பிரதமர் ருட்டே சந்தேகம்

யுக்ரேனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை ஆதரிப்பதற்கு எதிர்க்கட்சியை இணங்க வைப்பதில் நம்பிக்கை இல்லை என ஹாலந்து பிரதமர் மார்க் ருட்டே தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நாடாளுமன்ற தீர்மானத்தை கட்டுப்படுத்தாத, ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஹாலந்து மக்கள் இதனை நிராகரிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற அனைத்து உறுப்பு நாடுகளாலும் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் யுக்ரேயின் நுழைவதற்கான முதல் அடியாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தீர்மானத்தை கட்டுப்படுத்தாத, ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஹாலந்து மக்கள் இதனை நிராகரித்து விட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் இணையவோ அல்லது அதனை மறுப்பதற்கான மசோதாவை சமர்ப்பிக்கவோ செவ்வாய்க்கிழமை வரை நாடாளுமன்றம் ருட்டேவுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

யுக்ரேனின் முன்னாள் அதிபர் விக்டோர் யானுகோவிச், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமல் போனதால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இது யுக்ரேனில் ரஷ்யாவின் தலையீட்டை தூண்டியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சில அம்சங்கள் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனுடைய முக்கியத்துவத்தை பற்றி எதிர்க்கட்சிகளுக்கு எடுத்து சொல்லி சமாதானப்படுத்துவதற்காக, யுக்ரேயின் வெளியுறவு அமைச்சர் பௌலோ கிளீம்கின் கடந்த ஒரு வாரத்தை த ஹேக்கில் கழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்