வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை எதிர்த்து கேரகஸில் முழு அடைப்பு போராட்டம்

வெனிசுவேலா தலைநகர் கேரகஸில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கேரகஸில் நிலத்தடி ரெயில் மற்றும் பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன.

கேரகஸில் நிலத்தடி ரெயில் மற்றும் பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன.

ஆனால், பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் நிகோலஸ் மதுரோ பொருளாதாரத்தை தவறாக கையாண்டார் என எதிர்க்கட்சி அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆட்சி அதிகாரத்திலிருந்து அதிபர் மதுரோவை பதவியிறக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த கோரும் வகையில் சுமார் 12 மணிநேரம் முழு வேலை நிறுத்த்த்துக்கு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

பொருளாதாரத்தை தவறாக கையாண்டார் என எதிர்க்கட்சி அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை எதிர்த்து கேரகஸில் முழு அடைப்பு போராட்டம்

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்ளும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டை கைப்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப் போவதாக மதுரோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்