ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு வாலூனிய நாடாளுமன்றம் ஆதரவு

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு பெல்ஜியா மாகாணமான வாலூனியாவில் உள்ள நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வாலூனியாவின் சோஷலிச பிரதமர் பால் மேக்னேட்

இதன் மூலம், இந்த 7 ஆண்டுகளாக பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு உருவான இந்த ஒப்பந்தத்தை குலைக்க அச்சுறுத்திய எதிர்ப்புக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

வாலூனியாவின் சோஷலிச பிரதமர், பால் மேக்னேட், இந்த ஒப்பந்தத்துடன் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் தான் இதற்கு ஆதரவு தருவதை சாத்தியமாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களின் நிலையை வலுப்படுத்தி, விவசாயிகள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் இருப்பதாக வாலூனிய மக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தில் பெல்ஜிய அரசாங்கம் கையெழுத்திடுவதற்குமுன், தனது அனைத்து பிராந்தியங்களின் ஒப்புதலையும் அது பெற வேண்டிய அவசியம் தேவைப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்