நைஜீரியாவில் கடல் பரப்பில் கண்டறியப்பட்ட எண்ணெய் வளம்

எண்ணெய் பெருநிறுவனமான எக்ஸான் மொபில் நைஜீரியாவில் கடல் பரப்பில், ஒரு பில்லியன் பீப்பாய்கள் வரையிலான, எண்ணெய் வளத்தைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

தெற்கு நைஜர் டெல்டா பகுதியில் உள்ள போனி எண்ணெய் முனையத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் ஒவோவோ தளம் உள்ளது.

நைஜீரியா எண்ணெய் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளது.

கச்சா எண்ணெயின் விலை குறைந்ததாலும் , மற்றும் டெல்டா பகுதியில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாலும், நைஜீரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர உதவும் என்று இலக்கில், வியாழனன்று, அரசு அந்தப் பகுதியில், பத்து பில்லியன் டாலர்கள் செலவில் கட்டுமான திட்டங்களை தொடங்கியுள்ளது.