ஐ. எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் பங்கேற்கவுள்ளதாக ஷியா தீவிரவாத குழு அறிவிப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ. எஸ். அமைப்பின் மீது, இராக்கின் மொசூல் நகரின் மேற்கு பகுதியில் நடக்கும் தாக்குதலில் தாங்கள் பங்கேற்கவுள்ளதாக ஒரு ஷியா தீவிரவாத குழு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption டெல் அஃபார் நகரை மீட்க களமிறங்கியுள்ள ஷியா தீவிரவாத குழு

மற்ற குழுக்களுடன் இணைந்து டெல் அஃபார் நகருக்கு முன்னேறி செல்வதாக ஹெஸ்பொல்லா படையணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றுவதற்கு முன்னர், டெல் அஃபார் நகரில் ஷியா பிரிவு மக்கள் பெரும்பான்மையாக இருந்து வந்தனர்.

சுன்னி பிரிவு மக்கள் அதிமாக உள்ள மொசூல் நகரில் தாங்கள் நுழைய போவதில்லை என்று இந்த ஷியா தீவிரவாத குழு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஒரு மிகப் பெரிய தாக்குதலை குர்திய, சுன்னி மற்றும் ஷியா போராளிகளின் ஆதரவோடும், அமெரிக்க வான் தாக்குதல் பின்னணி பலத்தோடும் இராக் அரசு ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்