தைவானில் 300 டன் கேரட்களை பதுக்கிய நபர் கைது

தைவானில் ஒரு நபர், 300 டன்னுக்கும் அதிகமான கேரட்களை பதுக்கி வைத்து அதன் மூலம் உள்ளூர் உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தும் சாத்தியமான முயற்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தெற்கு பகுதி நகரான கெளஷியூங்கில் உள்ள ஒரு உள்ளூர் விளைபொருட்களை விற்பனை செய்பவரான் இந்த நபர், குளிர்காலம் முழுக்க விற்பனை செய்ய அதிகளவிலான கேரட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கேரட்கள் பூஞ்சை பிடித்திருந்ததாகவும், அந்த நபருக்கு காய்கறிகளை விற்பதற்கான எந்த நோக்கமும் இல்லை என்று நம்புவதற்கு இடமிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீப மாதங்களில், இரு பெரும் சூறாவளிகளால் தைவான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மோசமான வானிலை சூழ்நிலையை சாக்காகப் பயன்படுத்தி காய்கறிகளின் விலையை உயர்த்த பயன்படுத்தி வருவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணையாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்