தோழிக்கு அரசு விவகாரங்களில் செல்வாக்கு வளர அனுமதித்தார் - தென் கொரிய அதிபரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  • 29 அக்டோபர் 2016

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை நாட்டின் உள்துறை விவகாரங்களில் ஒரு தனி குடிமகன் அதிகாரம் செலுத்த அனுமதித்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, அதிபர் பதவி விலகக்கோரி தலைநகர் சோலில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தோழிக்கு அரசு விவகாரங்களில் செல்வாக்கு வளர அனுமதித்தார் - தென் கொரிய அதிபரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தன்னுடைய நீண்டகால தோழியான சோய் சூன்-சில் என்பவர் தனது அரசியல் உரைகளின் முன்வரைவுகளை திருத்தியதாக அதிபர் பார்க் குன் ஹை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதிபர் இந்த விவகாரம் தொடர்பாக 10 மூத்த ஆலோசகர்களைப் பதவி விலக உத்தரவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தன்னுடைய நீண்டகால தோழியான சோய் சூன்-சில் என்பவர் தனது அரசியல் உரைகளின் முன்வரைவுகளை திருத்தியதாக அதிபர் பார்க் குன் ஹை ஒப்புக்கொண்டுள்ளார்.

தென் கொரியாவின் மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் சோய் தொடர்புகளை வளர்த்து, நிதி சார்ந்த ஆதாயத்திற்காக தன்னுடைய நிலையை பயன்படுத்தினார் என்று ஊகங்கள் கிளம்பி உள்ளன.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து இதுவரை சோய் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்