மத்திய ஆப்ரிக்க குடியரசில் அதிகரிக்கும் வன்முறை; 2 நாட்களில் 25 பேர் பலி

மத்திய ஆப்ரிக்க குடியரசில் அதிகரித்திருக்கும் வன்முறையால் கடந்த இரண்டு நாட்களுக்குள் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருப்பது குறித்து கவலையடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐநா படைப்பிரிவுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

பாம்பாரி நகரத்திலும், அதை சுற்றியும், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதல்களில் புதிதாக அதிகரிப்பு காணப்படுகிறது.

வெள்ளிக்கிழமை உள்ளூர் ரோந்து காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு அதிரடி படையினரும், 4 பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

நகரின் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐநா படைப்பிரிவுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறையை நிறுத்த வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டு அதிகாரத்தை கைப்பற்றிய முன்னாள் செலிகா கிளர்ச்சியாளர் குழுவினரிடமும், ஆன்டி-பாலகா எனப்படும் கிறிஸ்தவ ஆயுதப்படையினரிடமும் ஐநா கேட்டு கொண்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்