சீன நிதி வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க சீனா நடவடிக்கை

நாட்டிற்கு வெளியே பணபரிமாற்றம் மேற்கொள்ள குடிமக்களை அனுமதிக்கின்ற, பொதுவாக பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வ ஓட்டையை சீன ஆட்சியாளர்கள் நீக்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சட்டப்பூர்வமற்ற முறையில் முதலீடு வெளியேறுவதை சீன அரசு தடுத்து வருகிறது

ஹாங்காங்கில் ஆயுள் காப்பீடு பெற்றுகொள்ள சீன பெருநிலப்பகுதியிலுள்ள வங்கிகளின் பண அட்டைகளை தனிநபர்கள் பயன்படுத்த இனிமேல் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இத்தகைய காப்பீடுகள் சீனாவின் "யுவான்" நாணயத்தில் பொதுவாக வாங்கப்பட்டு, பின்னர் இன்னொரு வெளிநாட்டு நாணயத்தில் பொதுவாக அமெரிக்க டாலரில் பணமாக்கப்படுகிறது.

சீனாவில் இந்த புதிய விதிமுறை அமலாவதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரவிலேயே இத்தகைய ஆயுள் காப்பீடுகளை வாங்க பலர் விரைந்துள்ளனர்.

சட்டப்பூர்வமற்ற முறையில் முதலீடு வெளியேறுவதை சீன அரசு தடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு ஒரு டிரில்லியன் டாலருக்கு (ஒரு இலட்சம் கோடி) மேலாக சீனாவை விட்டு வெளியேறியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்