அலெப்போவில் அரசு வசமுள்ள பகுதிகளில் தீவிர தாக்குதல்களை தொடங்கியுள்ள போராளிகள்
சிரியாவில் அலெப்போ நகரில் அரசு வசமுள்ள மாவட்டங்களில் புதிய தாக்குதல் நடவடிக்கையின் ஒரு அங்கமாக வெள்ளிக்கிழமை முதல் ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி தொடர்ந்து அரசு எதிர்ப்பு போராளிகள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
போராளிகளின் இந்த தாக்குதலில் குறைந்தது 38 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் பெரும்பாலனவர்கள் குழந்தைகள் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு மாவட்டமான ஹமடானியேவில், நச்சு வாயு அடங்கிய பீரங்கி குண்டுகளை போராளிகள் பயன்படுத்தியதாக சிரியா அரசு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ஆனால், போராளிகள் இதனை மறுத்துள்ளனர்.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
போராளிகளின் இந்த தாக்குதலை தொடர்ந்து, சிரியா மற்றும் ரஷ்யா போர் விமானங்கள் போராளிகள் வசமுள்ள நகரின் கிழக்கு பகுதியில் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.