ஹிலரியின் உதவியாளர் மின்னஞ்சல்களை சோதனையிடவுள்ள எஃப் பி ஐ

  • 31 அக்டோபர் 2016

ஹிலரி கிளிண்டனின் மூத்த உதவியாளர் ஒருவரின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த போது தனியார் மின்னஞ்சல் சர்வர்களை பயன்படுத்தியது குறித்த விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக, வெள்ளியன்று மத்திய புலானாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார்.

அமெரிக்க செனட்டின் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹேரி ரெய்ட், கோமியின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய உறவு குறித்த ஆச்சரியத்திற்குரிய தகவல்களாக அவர் கருதும் தகவல்களை கோமி அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கோமியின் தலையீட்டால், வெற்றி வாய்ப்பில் சரிவை கண்டுள்ளார் ஹிலரி.

முன்னதாக நடைபெற்ற கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றில் ட்ரம்பை காட்டிலும் ஒரு சதவீதமே முன்னணியில் இருந்தார் ஹிலரி.

தொடர்புடைய தலைப்புகள்