வாட்சப்பில் பரவிய வீடியோ உயிரை குடித்த விபரீதம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை

  • 31 அக்டோபர் 2016

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நன்மைகளை அடைந்துள்ள போதும், சம அளவில் தீமைகளும் வளர்ந்து வருகின்றன அதில் பெரும்பாலானவை பெண்களையே பாதிக்கின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன;அவ்வாறாக உள்ள பல்வேறு சம்பவங்களை படம் பிடித்து காட்டுகிறது பிபிசியின் அரபிக் பிரிவின் ஷேம் ஆன்லைன் என்ற தொடர். அந்த வரிசையில் இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் இந்த காணொளியில். தயாரித்தவர் பிபிசி இந்திப் பிரிவின் திவ்யா ஆர்யா.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிய 40 வயது பெண், தான் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளான வீடியோ வாட்சப்பில் பரவியதை அடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட சமூக அழுத்தங்கள் அவரை இந்த நிலைக்கு தள்ளியது.